வரவு செலவு திட்டத்தில் தாதியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பளப் பிரச்சினையை தீர்க்கக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை பனி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் , முற்பகல் 11:30 மணி முதல் 12.30 மணி வரையான காலப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அடையாள பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று மூன்று மணித்தியாலயங்கள் சேவைகளை இடைநிறுத்தி பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
Link: https://namathulk.com