நுவரெலியா பொகவந்தலாவ தெரேசியா தோட்டத்தில் வீடொன்றுக்குள் இருந்து கணவன் மனைவி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டிலுருந்த இருவரின் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
38 வயது சின்னையா விஜயகுமார் என்பவரும், 37 வயது பெருமாள் கௌரி என்பவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com