உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அமைதிப் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான நிபந்தனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் கருத்துக் கூறிய வண்ணம் உள்ள நிலையில், தற்போது ரஷ்யா, உக்ரைனை நேட்டோ அமைப்பிலிருந்து விலக வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நேட்டோ உறுப்புரிமையிலிருந்து உக்ரைன் விலக்கும் என்பதற்கும், சமாதான ஒப்பந்தத்திலும் உக்ரைன் நடுநிலையாக இருக்கும் என்பதற்கும் ரஷ்யா உத்தரவாதம் கோரும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்விரண்டு விடயங்களும் சமாதான உடன்படிக்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென ரஷ்யத் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு 30 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிய அமெரிக்காவும் உக்ரைனும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், விளாடிமிர் புடினும் வரும் நாட்களில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், உக்ரைனில் மூன்று ஆண்டுகால போரின் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபடியிருக்கின்றன.
போர் நிறுத்தத்தை ஆதரிப்பதாக ரஷ்யா கூறியபோது, அதற்கான நிபந்தனைகளையும் புடின் பட்டியற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com