88 வயதான புனித பாப்பரசர் 12 ஆண்டுகளுக்கு முன்பு புனித பாப்பரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவர் நீண்ட காலமாக இந்தப் பணியை செம்மையாக மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது ரோமில் உள்ள மருத்துவமனையில் நிமோனியாவுடன் போராடி வருகிறார்,
புனித பாப்பரசர் இரட்டை நிமோனியா நோய் நிலைமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு குரற் பதிவை மாத்திரம் வத்திக்கான் வெளியிட்ட நிலையில் அவருடைய புகைப்படங்கள் எதுவும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் புனித பாப்பரசரின் புகைப்படம் ஒன்றை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் புனித பாப்பரசர் பிரான்சிஸ் இருப்பதைக் குறித்த புகைப்படம் காட்டுகிறது. அவர் திருப்பலியைக் கொண்டாட அணியும் ஒரு உடையை அணிந்திருப்பதைப் புகைப்படத்தில் காணக்கூடியதாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக, ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் புனித பாப்பரசர் திருப்பலி நிறைவேற்றியதாக வத்திக்கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
புனித பாப்பரசர் நிலையான நிலையில் இருக்கிறார், ஆனால் இன்னும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று வத்திக்கான் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், கத்தோலிக்க திருச்சபைக்கான புதிய மூன்று ஆண்டு சீர்திருத்த செயல்முறைக்கு ஒப்புதல் அளித்து, குறித்த பதவியில் நீடிக்கத் திட்டமிட்டுள்ளதாக புனித பாப்பரசர் சமிக்ஞை செய்துள்ளார்.
Link : https://namathulk.com