மஞ்சிமா மோகன் 2015ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
‘அச்சம் என்பது மடமையடா ‘ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து இத் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழில், சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில், படம் இயக்க விரும்புவதாக மஞ்சிமா மோகன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. இன்னும் 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இக்கருத்து இவரின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
Link : https://namathulk.com