மாத்தறை திக்வெல்ல நில்வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டு படகுகள் தீக்கிரையாகியுள்ளன.
தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
படகில் தீ பிடித்தமை தொடர்பில் எவர் மீதும் சந்தேகம் இல்லை என படகு உரிமையாளர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
எனினும் படகில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Link : https://namathulk.com