மாத்தறை மிதிகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டின் முன்பக்க சுவர் மற்றும் ஜன்னல்களுக்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும் வீட்டிலிருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் கூறினர்.
துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை .
துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியவர்களும் அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com