ஹட்டன் திம்புலபத்தன அர்கில் தோட்டத்தில்
மின்னல் தாக்கத்திற்குள்ளான மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து வீழ்ந்தபோது அந்த பகுதியில் பயணித்த லொறியின் சாரதியும், அருகிலிருந்த வீட்டில் வசித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திம்புலபத்தன பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com