மகர நீதவான் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் காணப்படும் அரசுக்கு சொந்தமான காணியை , போலி ஆவணங்கள் தயாரித்தி தனியாருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 05 ஆம் திகதி மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com