இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இதனை குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
அதற்கமைய அடுத்தவாரம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com