எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’ 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது.
பாகுபலி முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை ரீ-ரிலீஸ் செய்யுமாறு ரசிகர்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு படக்குழு இந்தாண்டு ரீ-ரிலீஸ் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் இந்தாண்டு அக்டோபர் மாதம் 23ஆம் திகதி நடிகர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாகலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Link : https://namathulk.com