நடிகர் ரியோ நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து அண்மையில் ரியோவின் நடிப்பில் வெளியாகியிருந்தது ஸ்வீட் ஹார்ட் திரைப்படம்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி வெளியான இத் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வெளியான 03 நாட்களில் 2.3 கோடி வசூல் செய்துள்ளதாத் தெரிவித்துள்ளது படக்குழு.
Link : https://namathulk.com