அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இந்தத் திட்டம் 7ஆம் மாதம் முதலாம் திகதியிலிருந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கப்பட்ட ஏற்பாடுகளுக்குள், தற்போதைய நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைத் திருத்தி, அவற்றை பின்வருமாறு வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1.நலத்திட்டத்தின் அட்டவணை I இல் சேர்க்கப்பட்டுள்ள இடைக்கால சமூகப் பிரிவிற்கான சலுகை உரிமைக் காலம் 2025-04-30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2.விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக உதவி பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 7,500-லிருந்து 10,000 ரூபாவாக உயர்த்துதல் மற்றும் முதியவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை 3,000-லிருந்து 5,000 ரூபாவாக உயர்த்துதல் என்பனவற்றை, ஏப்ரல் முதல் செயல்படுத்துதல்.
3.மேற்கண்ட முன்மொழிவுகளுக்கு உட்பட்டு, அட்டவணை II இல் பட்டியலிடப்பட்டுள்ள விசேட தேவையுடையோருக்கான உதவித்தொகை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை மற்றும் முதியோருக்கான உதவித்தொகைக்கான கட்டண காலத்தை 2025-12-31 வரை நீடித்தல்.
4.விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளிடமிருந்து புதிதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான அதிகபட்ச வரம்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 2025 டிசம்பர் 31 வரை உரிய கொடுப்பனவுகளை செலுத்துதல்.
Link : https://namathulk.com