இலங்கையின் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார்.

Sivarathan Sivarajah
1 Min Read
அகுஷ்லா செல்லையா

இலங்கையின் முதல் சூப்பர்மாடல் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா தனது 67வயதில் காலமானார்.

‘அகு’ என்று அன்பாக அழைக்கப்படும் அவர், நாட்டின் ஃபேஷன் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு முன்னோடி ஆவார்.

அகுஷ்லா செலயா ஆங்கிலத் திரைப்படங்களான ஸ்லேவ் ஆஃப் தி கேனிபல் காட் (1978) மற்றும் டார்சன், தி ஏப் மேன்(1981) ஆகியவற்றில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் இலங்கையில் படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர் சில சிங்கள மொழித் திரைப்படங்களிலும் நடித்தார்.

1985 ஆம் ஆண்டு சார்லிஸ் ஏஞ்சல்ஸின் சிங்கள ரீமேக்கான ‘சுரா டூதியோ’, திரைப்படத்தில் பார்வையாளர்களின் நினைவில் நிலைத்து நிற்கும் வகையிலான ஒரு நடிப்பை வழங்கினார்.

இதற்கு முன்பு அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த பாத்திரம்தான் அவரது அந்தஸ்தை உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Link : https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *