அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானிய நிதியில் ஒரு பகுதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், சில விவசாயிகள் அந்த நிதியைப் பெறவில்லை என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, அனுராதபுரம் மாவட்டத்தில் 155 விவசாயிகளுக்கு உர மானியமாக ஒதுக்கப்பட்ட மொத்தம் 2,934,310 ரூபா திருடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமையை விவசாய அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
மேலும், மானிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரவித்தார்.
Link : https://namathulk.com