கல்முனையில், கடலில் மூழ்கிய பல இலட்சம் ரூபா பெறுமதியான படகு : இறங்குத்துறை இன்றி தவிக்கும் மீனவர்கள்.
அம்பாறை, கல்முனை கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் நங்கூரமிடப்பட்டிருந்த படகுஒன்று இன்று காலை கடலில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், குறித்த படகினை மீட்டு கரைக்கு இழுத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த படகானது நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு மூழ்கியபடகு சுமார் 65 இலட்சம் பெறுமதியானதுடன்,மூழ்கிய படகை கனரக வாகனத்தின் உதவியுடன் கரைக்கு இழுப்பதற்கான முயற்சிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெற்று வருதுடன் படகுகளை நங்கூரமிடக்கூடிய இறங்குத்துறை இன்றி பாரிய சிரமங்களை மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com