காஸாவில் இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வான்வழித் தாக்குதல்களில் நானுறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் நூற்றுக்கணக்கான சிறார்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களில் காசாவின் துணை உள்துறை அமைச்சரும், பிராந்தியத்தின் மிக உயர்ந்த ஹமாஸ் பாதுகாப்பு அதிகாரியுமான மஹ்மூத் அபு வபாவும் கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாஸுக்கு சொந்தமான “பயங்கரவாத இலக்குகள்” என்று அழைக்கப்படும் இலக்குகளை, தாங்கள் இலக்காகக் கொண்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசா யுத்த நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறவிட்ட நிலையில், ஜனவரி 19 அன்று போர்நிறுத்தம் தொடங்கியதிலிருந்து காசாவில் நடந்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலாக இத் தாக்குதல் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com