கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், சிகிரியாவில் முறையான முதலுதவி சேவைகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சிலோன் ஸ்பிரிட் சுற்றுலா சங்கத்தின் செயலாளர் விஜேசிங்க தெரிவித்தார்.
சிகிரியா டிக்கெட்டின் விலை 11, 000 ரூபா வசூலிக்கப்படும் தொகையால் குறைந்தபட்ச முதலுதவி வசதிகளைக் கூட வழங்க முடியாதது உண்மையிலேயே வெட்கக்கேடானது விடயம் என செயலாளர் கூறினார்.
அத்துடன், சிகிரியாவில் முதலுதவி வசதிகளைத் தொடங்க இன்னும் எத்தனை இறப்புகள் தேவை எனவும் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பொறுப்பான சில உயர் அதிகாரிகள் பேஸ்புக்கில் கருத்துகளை எழுதுவதில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், மற்றவர்கள் நாற்காலிகளை சூடேற்றுகிறார்கள் எனவும், செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சுற்றுலா சேவை வழங்குநர்கள் என்ற வகையில், சுற்றுலா தலங்களில் முறையான முதலுதவி வசதிகள் தொடர்பான இந்த மிக முக்கியமான கோரிக்கைக்கு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com