இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் காணப்படும் 67 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சட்டவிரோத குழுக்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை இந்திய மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பல அமைப்புகள் இந்தியா முழுவதும் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவை என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த அமைப்புகளின் சொத்துகளை முடக்குவது, அதன் உறுப்பினர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
அதற்கமைய தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அல்-காய்தா உள்ளிட்ட 67 அமைப்புகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன
Link : https://namathulk.com