முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் தேடப்படும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய தற்போது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, தேசபந்து தென்னகோனை கடமைகளில் இருந்து இடைநிறுத்தியது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர் இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் கூடுதல் தகவல்களை வழங்குவார் என்றார்.
அத்துடன், தேசபந்து தென்னகோன் மட்டுமல்லாது, இன்னும் பலரையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதுவரை பெயர் வெளியிடப்படாத பல நபர்களையும் தேடி வருவதாகவும், இதற்காக பொலிஸ் குழக்கள் றியமிக்கப்படி;டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
அதேபோல், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில் பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com