நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில், ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ மேஜர் ஒருவர் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
கடந்த 18ஆம் திகதி சிகிச்சை பெறுவதற்காக குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.
இதன்போது, அவரை வைத்தியசாலையில் அனுமதித்தவரையும், வைத்தியசாலை பணிப்பாளரையும், மற்றும் ஊழியர்களையும் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதற்கமைவாக, சம்பவம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து, முன்னாள் ராணுவ மேஜரை கைது செய்தனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட நபர், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Link : https://namathulk.com