மியான்மரின் உள்ள சைபர் மோசடி மையங்களில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து இதனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும் மார்ச் 18, அன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
இலங்கை மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளைத் தொடர்ந்து, பிப்ரவரி 3, 2024 அன்று மியான்மரின் துணைப் பிரதமரும் மத்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருமான யூ தான் ஸ்வேயுடனும், பிப்ரவரி 13, 2025 அன்று தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாரிஸ் சங்கியம்போங்சாவுடனும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் நடத்திய தொலைபேசி உரையாடல்களே இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்தன.
கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதில் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த விலைமதிப்பற்ற உதவிக்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நன்றிகளை தெரிவித்துள்ளது
Link : https://namathulk.com