யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த காணமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கை தீவிரம்.

Sivarathan Sivarajah
1 Min Read
குருநகர்

கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ள யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்களையும் தேடும் நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் காணாமல்போயுள்ள விடயம் தொடர்பில் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள பிரதானிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

மீனவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை உடன் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைய தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

46 வயதுடைய விமலேந்திரன் ஞானராஜ், 54 வயதுடைய பூலோகதாசன் ஆகியோரே கடந்த 15 ஆம் திகதி ஊர்காவற்துறையிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *