கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.
‘சிவ மனசுல சக்தி’ திரைப்படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷின் இரண்டாவது படமான இத் திரைப்படத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோரின் நடிப்பு மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் விஜயலட்சுமி, சித்ரா லட்சுமணன், ஷகிலா, மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
முக்கியமாக ஆர்யா மற்றும் சந்தானமிடையான நகைச்சுவைக் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவருகின்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையுடன் வெளிவந்த இப்படத்தின் மொத்தப்பாடல்களும் இன்றளவும் ரசிப்பட்டு வருகிறது. மேலும் நடிகர் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையின் ஒரு மைல் கல்லாகவும் இத் திரைப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த திரைப்படமானது கோடை காலத்தில் மீண்டும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வெளியாகும் திகதியை இன்னும் அறிவிக்காத நிலையில் குறித்த தகவல்கள் ரசிகர்களிடம் பெரு வரவேற்பைப் பெற்றுள்ளது
Link : https://namathulk.com