நடிகர் மணிகண்டன் அவரது மிமிக்கிரி திறமையால் ஆரம்பத்தில் அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும், ஜெய் பீம், லவ்வர், குட் நைட் ஆகிய திரைப்படங்களில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் மக்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்படும் நிலையில், நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி வெற்றிபெற்றுள்ளது படக்குழு.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி, ஜனவரி மாதம் 24ஆம் திகதி வெளியான இத் திரைப்படத்தில், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அந்தவகையில் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிநடை போட்டவண்ணம் உள்ள நிலையில், இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன்போதான புகைப்படங்கள் வைரலாக பேசப்பட்டுவருகின்றன.
Link : https://namathulk.com