பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சில நிமிடங்களுக்கு முன்பு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் இல்லத்தை நேற்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்னரும் இந்த இல்லம் சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட பல சந்தேகத்திற்குரிய பொருட்கள் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில்இ கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக காணாமல் போயுள்ள பொலிஸ் மா அதிபரை தேடும் பணிகளில் ஆறு சிறப்புக் குழுக்கள் ஈடுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், இன்றையதினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ்மா அதிபர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com