இந்தோனேசியாவானது தனது இராணுவச் சட்டத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை அங்கீகரித்துள்ளது, இது ஆயுதப்படை பணியாளர்களை அதிக பொதுமக்கள் பதவிகளை வகிக்க அனுமதிக்கிறது, இது அரசாங்க விவகாரங்களில் இராணுவத்தின் மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயகத்தில் ஆர்வலர்கள் இந்த திருத்தங்களை விமர்சித்துள்ளதோடு, 1998 இல் பதவி விலகிய முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் சுஹார்டோ தலைமையிலான இந்தோனேசியாவின் “புதிய ஒழுங்கு” சகாப்தத்திற்கு அவை கொண்டுவருவதை இந் நிகழ்வுகள் சமிக்ஞை செய்கின்றன என்று எச்சரித்துள்ளனர்.
முன்னாள் சிறப்புப் படைகளின் தளபதியும் முன்னாள் சுஹார்டோ மருமகனுமான ஜனாதிபதி பிரபோவோ சுபியான்டோ இப்போது நாட்டை வழிநடத்துகிறார், இவர் கடந்த அக்டோபரில் பதவியேற்றார்.
இந்தோனேசியாவின் சட்ட அமைச்சர் சுப்ரட்மன் ஆண்டி ஆக்டாஸ், இந்த சட்டம் சுஹார்டோ சர்வாதிகாரத்தை வகைப்படுத்திய இராணுவ மேலாதிக்கத்திற்குரியது என்பதை மறுத்துள்ளார், அதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் காரணமாக இது அவசியமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
“புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய இராணுவ தொழில்நுட்பத்திற்கு இராணுவம் மாற வேண்டும். வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான மோதல்களை எதிர்கொள்ள வேண்டும்” என திருத்தப்பட்ட சட்டத்தை ஆதரித்து, பாதுகாப்பு மந்திரி ஜாப்ரி ஜாம்சாய்ட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் புவான் மகாராணி ஒருமித்த வாக்கெடுப்புக்கு தலைமை தாங்கி, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கொள்கைக்கு இணங்க இந்த சட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றிய நிலையில், சட்டத்தில் திருத்தம் செய்ய குடியரசுத் தலைவர் முறையாகக் கோரிய இரண்டு மாதங்களுக்குள் இந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டது. சட்டமியற்றும் செயல்முறை விரைவுபடுத்தப்பட்டதாகவும், மசோதா மீதான விவாதங்களின் இரகசிய தன்மை குறித்தும் ஜனநாயக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சட்டத்தை “ஜனநாயகக் கொலை” என்று விவரித்து, ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு மாணவர் குழுவுடன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாணவர் அமைப்புகள் கூறியுள்ளன.
Link : https://namathulk.com