இலங்கையில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் இரகசியத் தளம் : வெளியான புதிய தகவல்.

Ramya
By
1 Min Read
சி.ஐ.ஏ

கொழும்பின் ஒரு இரகசிய தளம் உட்பட பனிப்போர் காலத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏயின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, 1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பில், அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

ரஸ்ய ஆதரவு ஊடகமான ஆர்.டி, அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் பதிவு நிர்வாகம் (நாரா) வெளியிட்ட கோப்புகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்களின்படி, சி.ஐ.ஏ பல்வேறு இடங்களில் இரகசிய தளங்களைக் கொண்டிருந்ததாகவும், இது பிராந்தியத்தில் அதன் செயற்பாடுகள் குறித்து புதிய தகவல்களை வெளிக்கொணர்வதாகவும் அமைந்துள்ளன.

கறுப்பு தளங்கள் என்றும் குறிப்பிடப்படும் சி.ஐ.ஏயின் இரகசிய தளங்கள், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை தடுத்து வைத்தல் மற்றும் விசாரணை செய்தல் உள்ளிட்ட பல்வேறு உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரகசிய வசதிகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *