பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கிரிக்கெட் கடுமையாக மறுத்துள்ளது.
மார்ச் 18 அன்று நடந்த பாராளுமன்ற விவாதத்தின் போது, அப்போதைய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இலங்கை கிரிகெட் 150,000 ரூபா சம்பளம் வழங்கியதாகவும், அவருக்கு மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் ஏனைய சலுகைகளை வழங்கியதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் விதானகே குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயம் தொடர்பில், தென்னகோனுக்கு எதுவித பணமோ அல்லது சலுகைகளோ வழங்கவில்லை என இலங்கை கிரிகெட் தெரிவித்துள்ளது.
அத்துடன், தென்னகோன் மேல் மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவியில் இருந்த காலத்தில், குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில், சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக அவரது நிபுணத்துவம் கோரப்பட்டது என்பதனையும் இலங்கை கிரிகெட் வலியுறுத்தியுள்ளது.
Link : https://namathulk.com