உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்பதற்கான கால அவகாசம் இன்று முடிவடைகிறது.
இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பிறகு எந்த வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் மார்ச் 17 ஆம் திகதி தொடங்கியது.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com