கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடந்த ஒரு வாகன விபத்து தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்த விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரத்வத்தையின் சட்டதரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிபதி நிலுபுலி லங்காபுர இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிரதிவாதிகளுக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீடு செலுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
2024 டிசம்பரில் குடிபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தியதற்காக லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செலுத்திய டிஃபென்டர், கொள்ளுப்பிட்டி சந்திப்பில் ஒரு காரில் மோதியதோடு, காரில் இருந்தவர்களையும் அவர் அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com