சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக புதிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என கோப் குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, தற்போது சிகரெட் வரியிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாய், சிகரெட் நிறுவனத்தால் கிடைக்கும் வருவாயை விடக் குறைவு என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்
சரியான தரவு மற்றும் கணக்கீட்டு முறைகள் இல்லாததை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இந்த விடயம் முரண்பாடுகளுக்கு வழிவகுப்பதாகவும், சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரி தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
Link : https://namathulk.com