கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தததுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமை ஆக்கியுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன், மீனவர்கள் கைது செய்வதை தடுக்க கோரி மாநில அரசு, மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலைத் தடுக்க கோரியும், இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோ, பாராளுமன்றத்தில் குரல் எழப்பினார்.
இலங்கையில், தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்., இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி கட்டுகிறோம். தமிழ்நாடு மீனவர்களைக் காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என பொதுச்செயலாளர் கேள்வி உழுப்பினார்.
அத்துடன், மீனவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து நூற்றுக்கணக்கான பெண்கள் ராமேஸ்வரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்
40 ஆண்டுகளில் 843 மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக கூறிய பொதுச்செயலாளர், மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மீனவர் பிரச்னையில் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறு மீனவர்கள் பிரச்சினை நீடித்து செல்லும் நிலையில் இந்திய பிரதமர் மோடி ஏன் இலங்கை செல்ல வேண்டுமெனவும் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு தமிழ்நாடு மீனவர்களின் நலன், பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை காக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மீனவர்களின் பிரச்னைக்கு அனைத்து வழிகளிலும் தீர்வு காண முயற்சிப்பதாகவும் கூறினார்.
அத்துடன், பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசிற்கெதிராக முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்தார்.
Link : https://namathulk.com