இலங்கையில் மக்களிடையே, ஈறு நோய் அதிகரித்து வருவதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
மூத்த குடிமக்களில் 50மூ க்கும் மேற்பட்டோர் ஈறு நோயால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
பொதுமக்கள் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண முடிந்தால் இந்த நோயைத் தவிர்க்கலாம் எனவும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் நிலந்த ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதன்படி, குறித்த நோயின் முதல் அறிகுறியாக ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்படுமென பல் அறுவை சிகிச்சை நிபுணர் நிலந்த ரத்நாயக்க கூறினார்.
ஆனால், பற்பசையை பயன்படுத்துவதால் மக்கள் இதை அடையாளம் காண முடியாது எனவும், இதனை பரிசோதிக்க, குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது பற்பசை இல்லாமல் பல் துலக்குமாறு பல் அறுவை சிகிச்சை நிபுணர் நிலந்த ரத்நாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்தச் செயல்முறையின் போது ஈறுகளில் இரத்தம் வந்தால் மருத்துவ உதவியை நாடுமாறு பல் அறுவை சிகிச்சை நிபுணர் நிலந்த ரத்நாயக்க பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com