காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளை மலேசிய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 க்கான தேடலை புதிதாக ஆரம்பிக்க ஒரு கடல் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு மலேசிய அரசாங்கம் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானமானது, 27 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் 2014 ஆம் ஆண்டில் காணாமல் போனது. இது தெற்கு இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. இது நவீன கால விமானப் போக்குவரத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக நீடித்த வண்ணம் உள்ளது.
2018 ஆம் ஆண்டில் ஓஷன் இன்பினிட்டி நிறுவனம் நடத்திய தனிப்பட்ட தேடலில் எதுவும் கிடைக்காத நிலையில்,, புதிய தேடல் தெற்கு இந்தியப் பெருங்கடலில் ஒரு புதிய இடத்தில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தேடலுக்கான திட்டங்களுக்கு மலேசியா கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு புதிய தேடலுக்கான இறுதி ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இந்த தடவையாவது முயற்சிகள் கைகொடுக்கும் என பரவலாக நம்பப்படுகிறது.
Link : https://namathulk.com