இயக்குனர் அருண்குமார் சேதுபதி, சித்தா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் 62வது திரைப்படமான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இத் திரைப்படமானது பாகம் 1 மற்றும் பாகம் 2ஆக வெளியாக இருக்கும் நிலையில் முதலில் ‘வீர தீர சூரன்’ பாகம் 2 ஐயே வெளியிடத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. இத் திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு முதல் பாகம் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைப்படமானது வரும் 27ம் திகதி வெளியாக உள்ளது.
Link : https://namathulk.com