இலண்டனுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இலண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்று பகல் 12:50 க்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த UL 503 மற்றும் இரவு 08 :40 க்கு இலண்டனிலிருந்து புறப்படவிருந்த UL 504 ஆகிய விமானங்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தை 1979 (இலங்கைக்குள்), +94117 77 1979 இலக்கத்திற்கோ நேரடி அழைப்பிலும் , +94744 44 1979 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கும் தொடர்புகொள்ள முடியும்.
Link: https://namathulk.com/