விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக , விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளின் நலன் கருதி இன்றிரவு வரை விமான நிலையம் மூடப்படுவதாக , ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இதனால் விமான நிலையங்களுக்கு யாரையும் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்கவிருந்த விமானங்கள் ஏனைய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
விமான கண்காணிப்பு வலைத்தளமான FlightRadar24 இன் தரவுகளின்படி, விமான நிலையம் மூடப்பட்ட போது சுமார் 120 விமானங்கள் தரையிறக்கத்திற்கு வர இருந்ததாகவும், பின்னர் ஏனைய விமான நிலையங்களுக்கு அவை திருப்பி அனுப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
Link : https://namathulk.com