உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இன்றி நேற்று நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம் முதல் வாசிப்புக்காக கடந்த முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 79வது பிரிவின்படி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (20) உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தை சான்றுபடுத்தினார்.
அதற்கமைய இந்த சட்டம் 2025 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.
Link : https://namathulk.com