காசாவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் இஸ்ரேலிய தரைப்படைகள் முன்னேறி வருவதால், இப்பகுதியில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருகிறது.
இஸ்ரேல் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதிலிருந்து, காசாவில் குறைந்தது 200 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கியுள்ளன
இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறியதிலிருந்து 590க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 49,617 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 112,950 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/