கொழும்பு, கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் , இரண்டு நபர்களை குறிவைத்து கடந்த 17 ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன்போது இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய ஒருவர் இராஜகிரிய விசேட அதிரடிப்படையினரால் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு உதவிய குற்றத்திற்காக அவரின் மனைவியான குறித்த இளம் யுவதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய கொட்டுவில பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com