இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 23 நிறுவனங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள், 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 83 (C) இன் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்பதை அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலை இலங்கை மத்திய வங்கி வழக்கமாக வெளியிடுகிறது.
இந்த நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Link: