நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

Aarani Editor
1 Min Read
மழை

வடக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய , வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது .

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு , ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை , பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பை பெற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *