குருநாகல் வாரியபொல பகுதியில் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாமை தொடர்பான விசாரணைக்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஏழு பேர் கொண்ட குழுவை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நியமித்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் கட்டுநாயக தளத்தில் விமானிகளுக்கான விசேட பயிற்சிகளை வழங்குவதற்காக காணப்பட்ட K-8 ரக பயிற்சி விமானம் இன்று காலை வாரியபொல பகுதியில் தென்னந் தோப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
பயிற்சி விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி பாதெனிய பகுதியிலுள்ள பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Link: https://namathulk.com/