பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பொலிசாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பத்தரமுல்ல பொல்தூவ சந்திக்கு அருகில் உள்ள பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வாக்குறுதி வழங்கியதற்கு அமைய தங்களுக்கான தொழில் வாய்ப்பை பெற்றுத்தருமாறு வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் போராட்டம் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com