மத்திய தபால் பரிமாற்றகத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு

Ramya
By
1 Min Read
போதைப்பொருள்

ஒரு கோடியே 78 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய பொதிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரான்ஸ் , அமெரிக்கா , கனடா , நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து போதைப்பொருள் அடங்கிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கண்டி, நீர்கொழும்பு, ஜா-எல, வெள்ளவத்தை , நுகேகொட , தங்கல்ல , மஹியங்கன உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போரின் முகவரிகளுக்கே குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 20 பொதிகள் மத்திய தபால் பரிமாற்றகத்தில் காணப்படுகின்ற போதிலும், அதனை பொறுப்பேற்க இதுவரை எவரும் முன்வராததால், அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன .

இதன்போதே, குறித்த பொதிகளில் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *