கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் தேடப்படும் இஷாரா செவ்வந்தி மாலைத்தீவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக மாலைத்தீவிற்கு சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தேடலை ஆரம்பிக்க முன்னரே, வெளிநாட்டிலிருந்து செயற்படும், பலம்வாய்ந்த பாதாள உலகக் குழுவொன்றை சேர்ந்த ஒருவரால் இஷாரா செவ்வந்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Skype ஊடாக சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவத்தின் மூன்றாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கான்ஸ்ரபிளுக்கும் , தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்திக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டுள்ளதாக இன்றைய தினம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதவானிடம் கூறியுள்ளனர்.
இஷாரா செவ்வந்தி தனது கையடக்க தொலைபேசியிலிருந்து பொலிஸ் கான்ஸ்ரபிளுக்கு இரண்டு துப்பாக்கிகளின் படங்களை அனுப்பி உள்ளதாகவும், பின்னர் அந்த படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்தில் காணப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link: https://namathulk.com/