அரச தொலைக்காட்சிகள் உள்ளிட்ட 7 அரச நிறுவனங்களின் நட்டம் மற்றும் கடன் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை அறிவித்தார்.
அந்தவகையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் 256 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன், 1,834 மில்லியன்
ரூபா கடனில் இயங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 152 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன், 1,603 மில்லியன்
ரூபா கடனில் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) 1,476 மில்லியன் ரூபா கடனில் இயங்குகிறது.
இலங்கை சீனி நிறுவனம் 11,165 மில்லியன் ரூபா கடனில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் 3,216 மில்லியன் ரூப கடனிலும், மில்கோநிறுவனம் 15,090 மில்லியன் ரூபா கடனிலும் இயங்குகின்றன.
அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சுமார் 340 பில்லியன் ரூபா கடனில் இயங்குவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com