கனரக டிப்பர் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி : மூவருக்கு காயம் : மன்னாரில் சம்பவம்

Sivarathan Sivarajah
0 Min Read
கனரக டிப்பர்

மன்னார்-பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் கனரக டிப்பர் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனைய மூன்று பேர் மன்னார் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த கனரக டிப்பர் , கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது .

இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *