கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 23 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு -15, ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய உதவி, ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நீதிமன்ற வாளாகத்திற்குள் இருந்து, விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தை காட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் வைத்து , பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதாம் 19 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
Link : https://namathulk.com